ஜோதிட ரகசியங்கள்! தொழில் அதிபர் ஆகிட

தொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..? ஜோதிட சூட்சுமம்
சொந்த தொழில் செய்ய வேண்டுமெனில் லக்னத்துக்கு தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் இடத்து அதிபதி,லக்னத்துக்கு வரவு செலவு ஸ்தானமாகிய 2ஆம் இடம்,லக்னத்திற்கு சேமிப்பு ஸ்தானமாகிய 11 ஆம் இட அதிபதி இவர்கள் லக்னத்திற்கு 3,6,8,12ல் மறையாமல் பாம்பு கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.அப்படி மறைந்திருந்தால் முதலீடு போட்ட பணம் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம்தான்..கூட்டு தொழில் செய்ய வேண்டும் எனில் லக்னத்துக்கு 7ஆம் அதிபதி 6,8 ,12ல் மறையாமலிருக்க வேண்டும் இல்லையெனில் நம் பார்ட்னர் நமக்கு பட்டை நாமம் சார்த்திவிடுவார்....

மிதுன லக்னமாக இருப்பின் அவருக்கு குரு பத்தாம் அதிபதியாக வருவார்...குரு செவ்வாய்,சனியுடன் சேராமல் இருப்பது நல்லது.செவ்வாய் 6ஆம் அதிபதி...தொழில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கும்.தொழில் மூலம் கடன் உண்டாகும்.குரு சனியுடன் சேர்ந்தால் அவர் எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதிபதி.அவர் பாக்யாதிபதி ஆச்சே என்று நினைக்கலாம்..9,10 ஆம் அதிபதி சேர்ந்தால் தரமகர்மாதிபதி யோகம் ஆச்சே என நினைக்கலாம்..ஆனால் சனி எட்டுக்கும் அதிபதி ஆச்சே அதனால் முதலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து நல்ல உயரத்துக்கு கொண்டு போய் அப்புறம் குப்புற தள்ளுவார்.குரு சுக்கிரனுடன் சேராமல் இருக்க வேண்டும்.சுக்கிரன் 5ஆம் அதிபதி பூர்வபுண்ணியாதிபதி ஆச்சே அவருமா அப்படி பண்ணுவார்..ஆம் .அவர் விரயதிபதியும் ஆச்சே தொழில் மூலம் பல வேற்றிகளை கொடுத்து அகலக்கால் வைக்க வைத்து ,பெரும் கடனாளி ஆக்குவார்.

குரு கேதுவுடன் சேர்ந்தால் ,தொழில் அமையாமல் சிரமப்படுவார்கள்..ராகுவுடன் சேர்ந்தால் மோசமான ஆட்களால் நஷ்டத்தை சந்திப்பர்.குரு 1,4,7,10,11ல் இருந்தால் நன்மையை செய்யும்.கேந்திராதிபத்திய தோசத்தை குரு கொடுப்பார் என்றால் தொழிலில் பிரச்சினை இல்லை.அடுத்தது வரவு செலவுக்கு அதிபதி மிதுன லக்னத்துக்கு யார் என பார்த்தால் சந்திரன்.அவர்3, 6,8,12ல் மறையாமல் இருக்க வேண்டும். 6ல் இருந்தால் தொழில் மூலம் வந்த பணம் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.12ல் இருந்தால் ஓட்டைப்பானைக்குள் தண்ணீர் ஊற்றியது போல ஆகிவிடும்.8ல் இருந்தால் தொடர்ச்சியாக வீண் செலவுகளாலும் தண்டச்செலவுகளாலும் நஷ்டத்தை சந்திக்க நேரும்.

11 ஆம் திபதியாக செவ்வாய்தான் வருகிறார் அவரே கடனை நோயை உண்டாக்கும் 6ஆம் அதிபதியாக இருக்கிறார் என்பதால் மிதுன லக்னத்தாருக்கு சேமிப்பு என்பது குதிரைக்கொம்புதான்..மனைவியே எல்லா வரவு செலவையும் பார்த்துக்கொண்டால் நல்லது.11ஆம் அதிபதி செவ்வாய் கெட்டவர் என்பதால் மூத்தவராக இவரே வீட்டில் இருப்பார்.இவருக்கு மூத்தவர் இருந்தால் பகை ஆவார்.பணம் கொஞ்சம் இருந்தால் அதை எப்படி செலவழிப்பது என்பதில்தான் கவனம் இருக்கும்.11 ஆம் அதிபதிதான் சேமிப்பை குறிக்கும்.2க்கு எட்டாம் அதிபதி வலுத்தால் வரவு செலவு நிரந்தரமாக பலன் தரும்.

10க்கு எட்டாம் அதிபதியாக பாக்யஸ்தானம் வலுத்தால்தன் தொழில் நிரந்தரமாக இருக்கும்...பாக்யாதிபதி மிதுன லக்னத்துக்கு சனியாக வருவதால் அவர் 6,8ல் மறையாமல் இருந்தால் தொழில் நிரந்தரமாக இருக்கும் இல்லையெனில் தொழில் மாறிக்கொண்டே இருக்கும்.

10 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் 10ஆம் இடத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லையெனில் சம்பளத்துக்கு வேலைக்கு போவதே நல்லது.சனி வக்ரமாக இருந்தால் சனி கெட்டிருந்தால் வெளிநாடு சென்று விடுவதே சிறப்பு.

தொழிலில் முன்னேற்றம் அடைய நடப்பு திசையும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறதோ,அந்ததிசை அதிபதி லக்னத்தில் எத்தனாம் இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து வாழ்வில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.லக்னத்திற்கு அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.3,6,8,12ல் மறையாதவராகவும் இருக்க வேண்டும்...அப்போதுதன் அவர் ஊரும்,உறவும் வியக்கும்படி முன்னேறுகிறார் ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கலாம்!

இனி ஆண்களும் பாலியல் பலாத்கார வழக்கு தொடுக்கலாம்

உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சீனாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி ஆண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின்படி, தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் ஆண் அல்லது பெண் இருவரில் யார் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டாலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது.

இதுவரை சீனாவில் பின்பற்றப்பட்டு வந்த சட்டத்தின்படி ஆண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாத சூழ்நிலை இருந்தது. அப்படி வழக்கு தொடர விரும்பினாலும் வேறு பிரிவுகளின் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இதானல் ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகக்குறைந்த அளவிளான தண்டனையே கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தேனியில் பிச்சை எடுத்த சிறுமிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு சிறுமிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

பிச்சை எடுத்த சிறுமிகள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவருடைய மகள்களான கார்த்திகா, சர்மிளா ஆகிய 2 பேரும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8–ம் வகுப்பிலும், சர்மிளா 6–ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். கார்த்திகா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு எழுதிய இவர் 892 மதிப்பெண்கள் எடுத்தார்.
50 சதவீத கட்டணம்

சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்புகிறது. அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு செய்யப்படுவார். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி இந்த ஆண்டு அன்று பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சிறுமி ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வானார்.

இதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்ல இருந்தார். இதற்கிடையே அவசர அழைப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனியில் இருந்து புறப்பட்ட கார்த்திகா நேற்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த வாய்ப்பு குறித்து கார்த்திகா கூறியதாவது:–

நான் சங்கரன்கோவிலில் 4–ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தேம். பின்னர் நாங்கள் 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் தாயாரை, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். எனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் தாயார் இறந்து விட்டார்.
கலெக்டர் ஆக வேண்டும்

   
எனக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருள்தான். அவர் மனித உருவில் வந்து உதவுகிறார். என்னிடம் அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள், செருப்பு, பைகள் என பலரும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நான் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து ரஷ்யா சென்றடைந்தேன்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பலர் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. ஏனெனில் நான் பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

இவ்வாறு மாணவி கார்த்திகா தெரிவித்தார். வருடைய தங்கை சர்மிளா தற்போது பிளஸ்–1 படித்து வருகிறார்.